பிரித்தானியாவில் அதிகரிக்கும் RSV வைரஸ்… விஞ்ஞானிகள் எச்சரிக்கை

0

பிரித்தானியாவில், இந்த குளிர்காலத்தில், RSV பாதிப்புடன் 60,000 பேர் காய்ச்சலால் மரணிப்பதாகவும், 40,000 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளமை குறித்து Academy of Medical Sciences-ன் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

RSV என்பது ஒரு சுவாச ஒத்திசைவு வைரஸ், பொதுவான சுவாச வைரஸ் என கூறப்படுகின்றது.

இது குளிர் போன்ற அறிகுறிகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது.

இந்த சுவாச வைரஸால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதாவது, 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், மூச்சுக்குழாய் அழற்சி (நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பாதைகளின் வீக்கம்) மற்றும் நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் (OVG) கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும் RSV-வியிலிருந்து சுமார் 83 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

RSV நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் நான்கு முதல் ஆறு நாட்களுக்குள் அறிகுறிகளைக் பெறுவார்கள்.

மூக்கு ஒழுகுதல், பசியின்மை, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றது.

இது தற்போது பரவும் கொரோனா வைரஸ் பரவலுடன் ஒத்து இருப்பதால், இதை வேறுபடுத்தி கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகவுள்ளது.

இதனால், காய்ச்சல் மற்றும் RSV ஆகியவற்றுக்கான சோதனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

பொது சுகாதார இங்கிலாந்து, நல்ல காற்றை சுவாசிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்றவற்றின் மூலம் இந்த நோயின் பரவலை குறைக்க முடியும் என்று கூறுகிறது.

இந்த நோய்க்கு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு என்று ஒரு தனி சிகிச்சை எதுவும் இல்லை.

தற்போது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here