பிரித்தானியாவில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்

0

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார்.

அதளை தொடர்ந்து நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து இன்று மன்னர் மூன்றாம் சார்லஸால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரிஷி சுனக் அழைக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரின் நெருங்கிய கூட்டாளியான வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் பணியாற்ற எதிர்பார்க்கவில்லை என முன்பே தெரிவித்து இருந்தார்.

நீதித்துறை செயலாளரான பிராண்டன் லூயிஸ் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here