பிரித்தானியாவிற்கு வரும் உக்ரைனியர்களுக்கு வழங்கப்படும் சலுகை!

0

பிரித்தானியாவிற்கு வரும் உக்ரைன் அகதிகளுக்கு ரயில் பயணம் இலவசமாக வழங்கப்படும்.

இதனை Rail Delivery Group (RDG) தலைமை நிர்வாகி Jac Starr அறிவித்துள்ளார்.

உக்ரேனிய அகதிகள், பிரித்தானிய இடங்களுக்கு பயணிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும்.

அகதிகள் உக்ரேனிய கடவுச்சீட்டு மற்றும் போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட் ஆகியவற்றைக் காட்ட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள அனைத்து ரயில் ஆபரேட்டர்களும் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல பேருந்துகள் மற்றும் கோச் ஆபரேட்டர்களும் இலவச பயணம் வழங்குகின்றனர் என்று RDG தெரிவித்துள்ளது.

இதுபோன்ற திட்டங்கள் ஏற்கனவே ஐரோப்பிய கண்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

எனவே ஐரோப்பிய ரயில் குடும்பத்துடன் இணைந்து நின்று எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, உக்ரைன் நாட்டவர்கள் கடந்த 48 மணி நேரத்தில் பிரித்தானியாவுக்கு வந்திருக்க வேண்டும்.

இது மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும், அதற்கு பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்று Jac Starr தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here