பிரித்தானியார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆய்வாளர்கள்…!

0

பிரித்தானியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது 53 நாடுகள் பரவி அங்கிருக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இந்த வைரஸ், B.1.617.1, B.1.617.2, மற்றும் B.1.617.3 என மூன்று பிரிவுகளாக உள்ளது.

இதில், B.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், B.1.617.2 வகை வைரஸ் 54 நாடுகளிலும், B.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரித்தானியாவில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அரசும் இதை கவனமாக கையாள வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் தெரிவிக்கையில்,

டெல்டா கொரோனா வைரஸ் இப்போது பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்துள்ளது.

மேலும், கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக் கொண்டால், பெரும்பாலான மக்களின் நலனைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here