பிரித்தானியர்கள் கொரோனாவுடன் வாழ பழக வேண்டும்! அரசின் முடிவு

0

பிரித்தானியாவில் கொரோனாவுடன் வாழ பழக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இனி மக்கள் தடுப்பூசி பாஸ்போர்ட்டுடன் செல்ல தேவையில்லை என பிரித்தானிய அமைச்சர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்துக்கொண்டே செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களும், விருந்தோம்பல் துறையினரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், ஜூலை 19 அன்று கொரோனா கட்டுப்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வது என பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், அன்றே இந்த கொரோனா பாஸ்போர்ட்டுக்கும் முடிவு கட்டுவது என அமைச்சர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இது தொடர்பில் கேபினட் கூட்டத்தில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றி காரணமாக, இனி பிரித்தானியர்கள் கொரோனாவுடனேயே இணைந்து வாழ முடியும்.

மக்கள் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளானாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தி தொடர்ந்து வாழ்ந்தது போல கொரோனாவையும் கருதும் ஒரு மனநிலைக்கு பிரித்தானியா வந்துவிட்டது.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மக்களை மாஸ்க் அணியச் சொல்வது, மற்றும், வீடுகளிருந்தவண்ணம் வேலை பார்ப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக இன்னமும் விவாதங்கள் நடைபெற்றவண்ணமே உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here