பிரித்தானியர்களை அச்சுறுத்தும் மர்மச் சத்தம்…. நீடிக்கும் பிரச்சனை..

0

இங்கிலாந்திலுள்ள Holmfield என்ற நகரில் வாழ்பவர்களுக்கு மர்மச் சத்தம் ஒன்று காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yvonne Conner என்ற பெண் குறைந்த அதிர்வலைகள் கொண்ட அந்த சத்தம் தன் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் அந்த மர்மச் சத்தத்திற்கு Holmfield Hum என்று பெயரிட்டுள்ளார்கள்.

இரண்டு ஆண்டுகளாக அந்த பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறும் Yvonne, தன் தலை வெடிக்கப்போவது போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.

சிலர் அந்தச் சத்தம் தொழிற்சாலைகளில் இயங்கும் பெரிய காற்றாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சிலர் அது அமெரிக்க இராணுவ செயல்பாடு ஒன்றாக இருக்கலாம்.

மேலும் சிலரோ, ஏலியன்கள் பூமிக்கு அனுப்பும் சிக்னலாக இருக்கலாம் என்று கூட கருதுகிறார்கள்.

பல ஆண்டுகளாக Holmfieldஇல் வாழ்ந்து வந்தாலும், தற்போது இந்த சத்தம் உருவாக்கியுள்தால் வேறு எங்காவது குடிபெயர்ந்துவிடலாம் என கூட யோசித்துக்கொண்டிருக்கிறாராம் Yvonne.

செவிலியர் பயிற்சி பெற்று வரும் Chloe Robinson என்ற இளம்பெண்ணும், கடந்த ஆறு மாதங்களாக அந்த சத்தம் தன் காதுகளில் ஒலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மதுபான விடுதி ஒன்றும், திருமண மண்டபம் ஒன்றும் நடத்தி வரும் Simon Speechley, தாங்கள் இது தொடர்பாக நகர கவுன்சிலுக்கு புகாரளித்துள்ளோம்.

ஆனால் அவர்கள் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என் கூறியுள்ளார்.

கடை ஒன்றை நடத்தி வரும் Sam West என்பவர், தனக்கு அப்படி ஒரு சத்தம் கேட்கவேயில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால், மற்றவர்கள் தங்கள் காதுகளில் அப்படி ஒரு சத்தம் கேட்பதாகக் கூறுவதை தான் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here