பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள அறிவியலாளர்கள்….

0

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா பரவல் குறையத் தொடங்கும் என அரசின் அறிவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் கால்பந்து வெற்றியைத் தொடர்ந்து கொரோனா அதிகரிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் சில இந்த நேர்மறையான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்படத்தக்கது.

தடுப்பூசிகள், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி, பருவநிலை மற்றும் மக்களுடைய நடத்தை மாற்றம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக சமநிலைக்கு வரும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை, பிறகு சில வாரங்களில் குறையத் தொடங்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எப்போது இது சாத்தியமாகும் என்பதை துல்லியமாக கூற இயலாது என அறிவியலாளர்கள் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என அரசு கருதுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here