பிரித்தானியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சனின் விஷேட அறிவிப்பு

0

பிரித்தானியாவில் ஜூலை 19 ஆம் திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியர்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இன்று கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் தொடர்பில் போரிஸ் ஜான்சன் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சரான சாஜித் ஜாவித் இதே விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.

அதில் ஐரோப்பாவைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவில்தான் அதிக அளவில் மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

ஆனாலும், பிரித்தானியா மூன்றாவது பொதுமுடக்கத்தை படிப்படியாக நெகிழ்த்தி வருகிறது.

சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இரவு விடுதிகள் திறக்கப்பட அனுமதி இல்லை.

பெரிய அளவிலான முழு அளவில் நடைபெற அனுமதி இல்லை, மதுபான விடுதிகளில் இன்னமும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

பிரித்தானியர்களில் சுமார் 64 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இன்று மக்கள் மீண்டும் சுதந்திரமாக செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவிக்க இருக்கிறோம் என போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், கொள்ளைநோய் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் பாதுகாப்பு குறித்து தாங்களே முடிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here