பிரித்தானியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள எச்சரிக்கை

0

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸின் திரிபு B.1.617.2 அடையாளம் காணப்பட்டது.

கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கிலாந்து பொது சுகாதாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியா இந்திய மாறுாபடு குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நாட்டில் இந்திய மாறுபாட்டின் பரவல்கள் எங்கு உள்ளன என்பதை உறுதிப்படுத்த பெரிய அளவிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும்

மேலும் போக்குவரத்து மற்றும் மக்கள் மீது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இந்தியா ஏற்கனவே பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இங்கிலாந்து பயணிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்த எவருக்கும் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நுழைய விலக்கு அளிக்கப்படும்.

ஆனால், அவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here