பிரித்தானியர்களுக்கு கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்! பிரான்ஸ் அரசு அறிவிப்பு…

0

பிரான்ஸ் நாட்டை நோக்கி பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

புதன் கிழமை அன்று நடந்த கேபினட் கூட்டத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் தனது ஆம்பர் பட்டியலில் பிரித்தானியாவை சேர்ந்துள்ளது.

அந்த ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அவர்களை பொலிசார் கண்காணிப்பார்கள், விதிகளை மீறுவோருக்கு 1,000 முதல் 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த விதிகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றின்படி, பிரான்ஸ் வருவோர், பிரான்சில் கால்வைப்பதற்கு 36 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட பி சி ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அல்லது 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில், தங்களுக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here