பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன்

0

பிரித்தானியாவில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 19 ஆம் திகதி தளர்த்தப்படவுள்ளன.

பிரதமர் இல்லம் முன்பு பத்திரிகையாளர்களை சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதில் போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், அடுத்த திங்கட்கிழமையுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த விடயங்களை உறுதிசெய்ய இருக்கிறார்.

ஆனாலும், ஜூலை 19க்குப் பிறகும், பல்பொருள் அங்காடிகள், இரயில்கள் போன்ற இடங்களில் மக்கள் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என எச்சரிக்க இருக்கிறார்அவர்.

கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது கொரோனா தொற்று அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறும் ஜான்சன், எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம், நமது முன்னேற்றத்தை பின்னோக்கித் தள்ளிவிடாமல் இருக்கவேண்டுமானால், நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்கவேண்டியது அவசியம், அத்துடன் நமது மருத்துவ அமைப்பை பாதுகாப்பதையும் நாம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார்.

மேலும் போரிஸ் ஜான்சன், கொரோனாவுக்கும் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும் இடையிலான பிணைப்பை தடுப்பூசிகள் வலிமையிழக்கச் செய்துவிட்டன.

இந்நிலையில் உலகத்தில் கொள்ளைநோய் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here