பிரான்சின் இரத்த தான அமைப்பான Établissement français du sang (EFS)க்கு எப்போதுமே இரத்தம் தேவைப்படும்.
ஆனால் பிரித்தானியர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி கிடையாது
பிரான்சின் இரத்த தானம் செய்ய கூடாதவர்கள் என்ற பட்டியலில், 1980க்கும் 1996க்கும் இடையில், தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருந்தவர்களுக்கு, பிரான்சில் இரத்த தானம் செய்ய அனுமதி இல்லை.
அவ்வாறெனில் பெரும்பாலான பிரித்தானியர்கள், பிரித்தானியர்கள் இல்லை என்றாலும் அந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்தவர்கள், பிரித்தானியாவில் படித்தவர்கள் மற்றும் வேலை பார்த்தவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது.
அதற்காக பிரான்ஸ் முன்வைக்கும் காரணம், ஒரு வேடிக்கையான காரணமாகும்.
பிரித்தானியாவில், 1980, 90களில் mad cow disease என்னும் நோய் கால்நடைகளில் காணப்பட்டது.
அதனால், பிரித்தானியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு 10 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.
அந்த காலகட்டத்தில், அந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, கிட்டத்தட்ட 4 மில்லியன் பசுக்கள் பிரித்தானியாவில் கொல்லப்பட்டன.
ஏனென்றால், பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சியை சாப்பிட்ட 177 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் மாட்டிறைச்சி இறக்குமதி தடையை விலக்கிக்கொண்ட பின்னரும், பிரான்ஸ் நீண்ட காலம் அதற்கு தடை விதித்திருந்தது.
அதே போன்று இரத்த தானத்திற்கும் பிரான்ஸ் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.