பிரான்ஸ் முழுவதும் மீண்டும் ஊரடங்கு…! ஜனாதிபதி மேக்ரானின் அறிவிப்பு

0

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸில் இயல்பு நிலை திரும்புவது கடினம், ஊரடங்கு இன்னும் சில மாதங்கள் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அதில் கொரோனா பரவல் அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் மேலும் இரவு 7 மணிமுதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

அனைத்து கடைகளும் மூடப்படும்.

அனைத்து ஆரம்ப பாடசாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தார்.

வரும் 26 ஆம் திகதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை திறக்கப்படும்.

நாட்டில் தடுப்பூசி அதிகம் போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 16 ஆம் திகதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் மே 5 ஆம் திகதி முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில், வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.

அதற்கு மேலே செல்ல வேண்டும் என்றால் அனுமதி பத்திரம் அவசியம், இல்லையெனில் 135 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

நாடு வரும் மே மாதம் நடுப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here