பிரான்ஸ் மீது ஐ.நா கடும் கண்டனம்…

0

பிரான்ஸில் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஐ.நா குழு பிரான்ஸ் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் பள்ளியில் படிக்கும் போது ஹிஜாப் அணிவதை தடை செய்த பிரான்ஸ் சர்வதேச உரிமை ஒப்பந்தத்தை மீறியதாக ஐநா குழு தீர்ப்பளித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை பிரான்ஸ் உடைத்துள்ளது என ஐ.நா மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

1977-ல் பிறந்த ஒரு பிரெஞ்சு நாட்டவரால் 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து அதன் முடிவு எடுக்கப்பட்டது.

அவரது வழக்கறிஞர் அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை.

பாதிக்கப்பட்ட பெண் 2010-ல் பெரியவர்களுக்கான தொழில்முறை பயிற்சி வகுப்பில் இருந்தார்.

மேலும் நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

பாரிஸின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள லாங்கெவின் வாலன் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்,

பொதுக் கல்வி நிறுவனங்களில் மதச் சின்னங்களை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்.

ஹிஜாப் அணிந்து கொண்டு, அவரது தொடர்ச்சியான கல்விப் படிப்பில் பங்கேற்பதைத் தடை செய்து, ஒப்பந்தத்தை மீறி அவரது மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் என ஐ.நா கமிடி தெரிவித்துள்ளது.

குழுவின் முடிவு மார்ச் மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here