பிரான்ஸ் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு…

0

பிரான்ஸில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்த வகுப்பறையில் உள்ள தடுப்பூசி போடாத மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer அறிவித்துள்ளார்.

11 வயது முதல் 18 வயது வரை உள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி போடாத மாணவர்கள் வீட்டிலிருந்த படி ஆன்லைன் வகுப்பில் பள்ளி படிப்பை பயில வேண்டும்.

2 டோஸ் தடுப்பூசி போட்ட மாணவர்கள் தொடர்ந்து நேரடி வகுப்பில் பாடம் படிக்க முடியும் என Jean-Michel Blanquer அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போட முடியாத ஆரம்ப பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, வகுப்பில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதியானால் வகுப்பறை மூடப்படும்.

பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது என Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார்.

12 முதல் 17 வயதினரிடையே தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த, பள்ளி வளாகத்திற்குள் அல்லது அருகில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்படும் என Jean-Michel Blanquer அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here