பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்படும் நிலை

0

மீன்பிடி விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் நிலை.

பிரெக்சீட்டுக்குப் பிந்தைய உரிமைகளின்படி பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு 47 ஐரோப்பிய ஒன்றிய சிறிய படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் வெறும் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவான Jersey, தன் கடற்கரையில் எத்தனை ஐரோப்பிய ஒன்றிய படகுகள் மீன் பிடிக்கலாம் என அறிவிக்க இருக்கின்றது. இதனால் பிரான்ஸ் தரப்பு கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.

கடந்த வருடம் செய்யப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறி பிரித்தானிய தரப்பு துரோகம் செய்வதாக கூறும் பிரான்ஸ் அரசு, அதற்காக பழி வாங்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி எடுத்துக்காட்டாக Jersey தீவுக்கு பிரான்சிலிருந்து மின்சாரம் வழங்கப்படும் நிலையில், அதை துண்டிக்கும் என ஏற்கனவே அந்நாட்டு தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவு இருக்கலாம். இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் துறை அமைச்சரான Clement Beaune, மேலும் சில படகுகளுக்கு மீன்பிடி உரிமம் கிடைக்கும் வகையில் கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தைகள் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் ஒப்பந்தத்தை மீறி எங்கள் படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரெஞ்சு மீனவர்கள் பிரித்தானிய மீன்களில் ஒன்றைக்கூட பிரான்ஸ் மண்ணில் விற்கவிட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் மீன்பிடித்தல் தொடர்பில் பிரான்சுக்கு பிரித்தானியாக்கும் இடையில் கடும் மோதல் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here