பிரான்ஸ் மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து

0

பாரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் வீடுகளில் திடீரென பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

வறட்சி மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதென இல் து பிரான்ஸ் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பாதிப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளையும் பாதித்த போதிலும் இல் து பிரான்ஸில் மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.

76.6 சதவீத நிலப்பரப்பில் அமைந்துள்ள நடுத்தர அளவிலான வீடுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான விரிசல்கள் திடீர் வெடிப்புகளை ஏற்படுத்தி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்தால், தண்ணீர் தேங்கி, பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்-எ-மார்ன், எசோன் மற்றும் இவ்லின் ஆகியன மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும் என சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களின் போது வீடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகரித்து அது வீட்டில் தங்கியிருக்கும் மக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here