பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட சீஸ்கள் மீளக்கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

லிஸ்டீரியா நச்சுத்தன்மையின் அபாயம் காரணமாக ஓஷோன்(Auchan), லுக்ளேர் (Leclerc) மற்றும் அந்தேர்மார்ஷோ (Intermarché) உள்ளிட்ட சுப்பர் மார்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட சீஸ்கள் மீளக்கோரப்பட்டுள்ளன.

குறித்த சீஸ் கட்டிகள் முக்கியமாக 3 சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்றோமஜெறி லு ஸன்ருறிஓன் (Fromagerie Le Centurion) எனப்படும் தயாரிப்புகளின் கீழ் விற்பனை செய்யப்படும் 2 வகையான சீஸ்களை கொள்வனவு செய்தவர்கள் அதனை மீள ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 4 ஆம் திகதிக்குள் விற்பனை செய்யப்பட்ட பவே ஓத் து ப்றோன்ஸ் (Pavés Hauts-de-France) எனப்படும் 230 கிராம் சீஸ் பக்கட்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஏப்ரல் மாதம் 16ஆம் முதல் 26ஆம் திகதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ப்றோமஷ் தபாய் ஓன் தே (Fromages dAbbaye en dés) எனப்படும் 120 கிராம் சீஸ் பக்கட்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்றோமஷ் தபாய் ஓன் தே (Fromages dAbbaye en dés) சீஸ் வகைகள் கோறா (Cora), அதக் (Atac), மற்றும் ஸிஸ்தம் உ (Système U) சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அவற்றை உண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை கொள்வனவு செய்தவர்கள் அதனை குப்பையில் வீசி விடுமாறு அல்லது கொள்வனவு செய்த இடத்தில் மீள ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதனை உட்கொண்டிருந்தால் தசை வலி காய்ச்சலால் பாதிக்கப்பட கூடும்.

மேலும் மருத்துவரை அணுக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால் ஆபத்துக்கள் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

France recalls more cheeses due to listeria risk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here