பிரான்ஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…

0

பிரான்சில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் மருத்துவ நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதை நிவர்த்தி செய்ய அந்நாட்டு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மருத்துவம் மற்றும் சுகாதார வாரியாக உள்ள பணியாளர்களுக்கு கொரோனா விதி முறைகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்கள் வேலைக்கு செல்லலாம் மற்றும் அவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுபாடுகளை சரி செய்யும் நோக்கத்தில் மட்டுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு பரவக்கூடும் அபாயம் உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிறப்பு நடவடிக்கை மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள், மருத்துவர்கள் அலுவலகங்கள் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here