பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பிரதமர்

0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் ஊரடங்கு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் Jean Castex இன்று, காலை 6 மணியில் இருந்து மாலை 7 மணி வரையான பகல் நேரத்தில் உங்கள் இடத்தில் இருந்து வெளியே பயணிக்க அனுமதி சீட்டு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

10 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் பயணிக்க அனுமதி பத்திரத்துடனும் ஒரு காரணத்திற்காக மாத்திரமே வெளியில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் நீங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் வெளியே செல்வதற்கு, அனுமதி சான்றிதழ் அவசியம் இல்லை.

ஆனால் வசிப்பிட முகவரிக்கான அத்தாட்சியினை வைத்திருக்க வேண்டும்.

அதுவே நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீற்றருக்கு மேல் தாண்டிச் சென்றால், கட்டாயம் அனுமதிச் சீட்டு தேவை, அதில் அதற்கான காரணம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதே நேரம் வேலைக்குச் செல்வதானால் பணிபுரியும் நிறுவனத்தின் அத்தாட்சிப் சீட்டும் வைத்திருத்தல் அவசியம் என்பதால் இரு அனுமதிப்பத்திரங்களும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில், மாலை 7 மணி முதல் ஊரடங்கு ஆரம்பிப்பதால், மாலை 7 மணியிலிருந்து, அதிகாலை 6 மணி வரை கட்டாய அனுமதி சீட்டு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here