பிரான்ஸ் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0

பிரான்ஸ் விமான கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து புறப்படும் மற்றும் பிரான்சுக்கு வரும் பாதிக்குப் பாதி விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் கடுமையான இடையூறு ஏற்படும் என எச்சரித்துள்ள பிரான்ஸ் விமானத் துறை அதிகாரிகள், பயணிகள் தங்கள் பயணங்களை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை, வெள்ளிக்கிழமை (16.9.2022) காலை 6.00 மணிக்கு துவங்கும் இந்த வேலை நிறுத்தம், மறுநாள் சனிக்கிழமை (17.9.2022) காலை 6.00 மணி வரை நீடிக்க உள்ளது.

விமான கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணிச்சூழல்கள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here