பிரான்ஸ் நீடிக்கும் மர்மம்…. திடீரென விழுந்த பனிக்கட்டித்துண்டு

0

பிரான்சிலுள்ள Haute-Savoie பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது, திடீரென பெரிய பனிக்கட்டித்துண்டு ஒன்று விழுந்துள்ளது.

அது விழுந்ததில் வீடு பலத்த சேதம் அடைந்த நிலையில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அந்த பனிக்கட்டித்துண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

அது விமானம் ஒன்றிலிருந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனரை்.

அது Megacryometeor என்னும் அபூர்வ வானியல் நிகழ்வாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

Megacryometeor என்பவை, வானம் தெளிவாக இருக்கும் நிலையிலும் வானின் மேல் பகுதியில் உருவாகும் பனிப்பாளங்களாகும்.

2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோல 50க்கும் மேற்பட்ட பனிப்பாளங்கள் விழுந்துள்ளன.

பிரேசிலில் 50 கிலோ எடையுள்ள ஒரு பனிப்பாளம் விழுந்துள்ளது.

ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிடில் அதே ஆண்டில் பல நாட்களாக தொடர்ந்து பல பனிப்பாளங்கள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பனிப்பாளம் எங்கிருந்து விழுந்தது என்பது மர்மமாகவே நீடிக்கும் நிலையில், அதிகாரிகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here