பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…

0

பிரான்ஸ் 20 மில்லியன் கொவிட் தடுப்பூசியை செலுத்தும் இலக்கை நேற்று அடைந்துள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த இலக்கு குறித்து பதிவிட்டுள்ளார்.

20 மில்லியன் என்ற இலக்கானது நாட்டின் சனத்தொகையில் 30 வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் சரியான எண்ணிக்கை 20,086,792 எனவும் 8,805,345 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றக்கொண்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதிக்கு முன் 30 மில்லியன் ஆரம்ப தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அரசு கொண்டுள்ளது என இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

முன்னுரிமையாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூ வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளை தற்போது மேற்கொள்ள முடியும்.

பிரான்ஸ் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய புள்ளி விபரங்களின் படி 4271 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here