பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்…. அடுத்த சுற்றுக்குத் தகுதியானவர் விபரம்

0

பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும்(Emanuel Macron), அவருக்குக் கடுமையாகப் போட்டி கொடுக்கும் மரீன் லே பென்னும்(Marine Le Pen) அடுத்த சுற்றுத் தேர்தலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவு மதிப்பீட்டின்படி மக்ரோன்(Emanuel Macron) முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர்.

இருவரைத் தவிர மற்ற முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

இரண்டாம் சுற்றுத் தேர்தல் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் சுற்றுத் தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு இன்று பின்னேரத்தில் அறிவிக்கப்படும்.

96% முடிவுகள் எண்ணப்பட்ட நிலையில், இம்மானுவேல் மக்ரோன் (Emanuel Macron) 27.42% வாக்குகளையும், மரைன் லு பென்(Marine Le Pen) 24.03% மற்றும் ஜீன்-லூக் மெலன்சோன்(Jean-Luc Melenchon) 21.57% வாக்குகளையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here