பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த நபர்!

0

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இமானுவேல் மேக்ரோன் தெற்கு பிரான்ஸிலுள்ள ட்ரோம் மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு மாணவர்களுடன் உரையாடிய பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்களது அருகில் இமானுவல் மேக்ரூன் சென்றுள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் கூட்டத்திலிருந்த இளைஞர், தமது ஒரு கையால் இமானுவேல் மேக்ரோனின் கையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

உடனடியாக இதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபரை பிடித்து இழுத்துச்சென்றுள்ளனர்.

பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனை கன்னத்தில் அறைந்த வீடியோ பிரான்ஸில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here