பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வருகின்றது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக பிரான்சின் பல நகரங்களில் வெப்ப அலை வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைத்து துறைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய அந்நாட்டு அரசு, சிறப்பு உதவி எண்ணை அறிவித்துள்ளது.
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதமடைந்ததுடன், 3,200 பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.