பிரான்ஸில் 3 பொலிஸாரை தாக்கிய நபர் கைது!

0

மேற்கு பிரான்ஸில் லா சபெல்லே என்ற இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியை ஒரு நபா் திடீரென கத்தியால் குத்திவிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.

ஹெலிகாப்டர்கள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

இந்நிலையில் அந்த நபர் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனர்.

அப்போது அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

பின்னா், அந்த நபரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது முயற்சியின்போது காயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் பிரான்ஸ் நாட்டை சோந்தவர் எனவும், தனது கடுமையான மத நடைமுறைகள் காரணமாக அவர் கண்காணிப்புப் பட்டியலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here