பிரான்ஸில் ஸ்பைடர்மேன் நால்வர் கைது….

0

பிரான்ஸில் ஸ்ட்ராஸ்பேர்க் நகர தேவாலயத்தின் கூரையில் ஸ்பைடர் மேன் அணிந்த நான்கு இளைஞர்கள் ஏறினர்.

இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 2 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் நடந்தது.

கைது செய்யப்பட்ட நால்வரும் 21 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் எவ்வித ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகைப்படம் எடுப்பதற்காக தேவாலயத்திற்கு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். தேவாலயம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here