பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான எரிக் செமூருடன் மரியோன் மரெசால் இணைந்த நிலையில் எரிக் செமூர் (Eric Zemmor) மோசமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதன்படி வருங்காலத்தில் பிரான்சில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெளிநாட்டு வம்சாவளியின் முதல் பெயரை வைப்தைத் தடை விதிக்கவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.
ஒரு தழிழ்க் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தமிழ்ப் முதற் பெயர் வைப்பதை எரிக் செமூரின் (Eric Zemmor) திட்டம் தடுக்கின்றது.
அதேசமயம் மரின் லூப்பன் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மரின் லூப்பனின் மருமகளுமாகிய மரியோன் மரெசால் எரிக் செமூரின் (Eric Zemmor) இந்த திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
மரியோன் மரெசாலிற்கும் எரிக் செமூரிற்குமான (Eric Zemmor) இடைவெளியும் அதிகரித்துள்ளது.
தனது மாமியான மரின் லூப்பனிற்குத் தனது ஆதரவை வழங்காது எரிக் செமூரிற்கே (Eric Zemmor) தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் எரிக் செமூர் (Eric Zemmor) அணுகுமுறைக்கு மரியோன் மரெசால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
முதல் பெயர்கள் ஒரு நாட்டின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
இதை எரிக் செமூர் (Eric Zemmor) அறிவித்திருக்கும் விதம் தவறானது என வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாளத்தைப் பாதுகாப்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வு கொள்கை மற்றும் கலாச்சார, கல்வி அணுகுமுறை மூலம் வெளிப்படையாக செய்யப்படும்.
மேலும் முதல் பெயர்களைத் திணித்து மக்களின் தனியுரிமையில் தலையிடுவது அரசின் வேலையல்ல என மரியோன் மரெசால் கூறியுள்ளார்.