பிரான்ஸில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 4.8 சதவீதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதோடு மார்ச் மாதத்தின் பின்னர் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து காணப்பட்ட அளவை எட்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 3.6 சதவீதமாகவும் மார்ச் மாதத்தில் 4.5 சதவீதமாகவும் இருந்தது என்று பிரான்ஸ் புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிசக்தி செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இந்த வருடம் 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் பிரெஞ்சு மக்களின் வீட்டு நுகர்வில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிரான்ஸில் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் உணவு பொருட்களின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பிரான்ஸ் மாத்திரமின்றி ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கம் பல தசாப்தங்களின் பின்னர் பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

