பிரான்ஸில் கட்டாய தனிமைப்படுத்தல் பட்டியலில் மேலும் இணைக்கப்பட்ட நாடுகள்

0
airport terminal background ,aircraft and highway with blue sky

பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகளே இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன்ற நாடுகளை இணைத்திருந்த பிரான்ஸ், கடந்த மே 8ஆம் திகதி முதல், இலங்கை, கட்டார், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here