பிரான்ஸில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்…! பிரதமரின் முக்கிய அறிவிப்பு

0

பிரான்சில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

பிரான்சில் உணவகம், கஃபே, ஷாப்பிங் சென்டர், மருத்துவமனை அல்லது நீண்ட தூர ரயிலில் நுழையும் எவரும் ஆகஸ்ட் முதல் சிறப்பு கோவிட் ஹெல்த் பாஸைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

இந்த கோவிட் ஹெல்த் பாஸ், ஒரு நபருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அல்லது அவரது சமீபத்திய கொரோனா சோதனை முடிவுகளைக் காட்டுவதாக அமைகின்றது.

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் சினிமா, தியேட்டர், அருங்காட்சியகம், தீம் பார்க், கலாச்சார மையம் போன்ற வெகுஜன இடங்களில் நுழையும் போது கோவிட் ஹெல்த் பாஸ் கட்டாயமாகும்.

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 21-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி கூறினார்.

சுகாதார மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கட்டாய கோவிட்-19 தடுப்பூசிகளையும் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அந்த தொழிலாளர்கள் மீதான தடுப்பூசி சோதனைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும், அதற்கு இணங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here