பிரான்ஸில் சுப்பர் மார்க்கெட்களில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சூரிய காந்தி எண்ணெய் மற்றும் கடுகிற்கு அடுத்தப்படியாக மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறை முழு பலத்துடன் சுப்பர் மார்க்கெட் கட்டமைப்பு தாக்கியுள்ளதென சுப்பர் மார்க்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பல சுப்பர் மார்க்கெட்களில் காட்சிப்படுத்தல் அலுமாரிகள் வெறுமையாகி உள்ளது.
மில்லியன் கணக்கான மக்களின் தினசரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தங்களை கடுமையாக பாதித்துள்ளதாக சுப்பர் மார்க்கெட் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.
தட்டுப்பாட்டிற்கு மேலதிகமாக உணவு பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில், சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டரின் விலை 1.79 யூரோவிலிருந்து 2.10 யூரோவாக உயர்ந்துள்ளது.
உணவுகளுக்காக மூலப்பெருட்களுக்கு மேலதிகமாக இறைச்சி, பால் உள்ளிட்ட பிரதான பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பலர் வழமை விடவும் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கினறனர்.
அதனால் தட்டுப்பாடு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
