பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய ஒப்பந்தம்

0

பிரான்ஸின் பிரஜைகள் இனி தங்கள் குடியுரிமையை இழக்காமல், ஸ்பெயின் நாட்டு குடியுரிமையையும் ஒரே சமயத்தில் பெற முடியும்.

மேலும் ஸ்பெயின் நாட்டவரும் தங்கள் குடியுரிமையை இழக்காமல் பிரான்ஸ் குடியுரிமையையும் பெற முடியும்.

இரு நாடுகளுக்கு இடையில் இரட்டைக் குடியுரிமை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய உடன்படிக்கை ஏப்ரல் 1 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த பின் இது போன்ற ஒரு விடயம் சாத்தியமாகியுள்ளது.

லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே ஸ்பெயின் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.

இந்த ஒப்பந்தம் மார்ச் 2021-ல் பிரான்சின் மொன்டாபனில் கையெழுத்தானது.

அந்த நேரத்தில், ஸ்பெயின் அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரி, Arancha González Laya, உடன்படிக்கையின் “விதிவிலக்கான தன்மையை” எடுத்துரைத்தார்.

இது பிரான்சில் வசிக்கும் 275,000 ஸ்பானியர்களையும் ஸ்பெயினில் வாழும் 125,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்களையும் பாதிக்கும் என்று கூறினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, ​​பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-யவ்ஸ் லு ட்ரியன், இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையேயான நல்லுறவின்” வலுவான சின்னம் ” என்று கூறினார்.

இப்போது, ​​ஸ்பெயின் வெளியுறவு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒத்துழைப்புக்கான தற்போதைய அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் மற்றும் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறைக்கான பிரெஞ்சு மந்திரி Jean-Yves Le Drian இருவரும் ஸ்பானிய-பிரெஞ்சு குடியுரிமை ஒப்பந்தம் அமுலுக்கு வருவதை வரவேற்றுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் காலவரையின்றி செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here