பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய விதி முறைகள்…

0

பிரான்சில் நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 18,000 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran அறிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் ‘ஹெல்த் பாஸ்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை பிரான்ஸ் ஜானதிபதி மாக்ரோன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பிரான்சில் தொற்றுகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் புதிய கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா திரையரங்கிற்குள் நுழைய தடுப்பூசி போட்தற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை அல்லது சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

இதே விதிகளை ஆகஸ்ட் மாதம் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் நுழைவதற்கு அமுல்படுத்தலாமா என்பது குறித்து பின்னர் எம்.பி-க்கள் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here