பிரான்ஸிற்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கான விதிமுறைகள்…

0

கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து பல நாடுகளிடயே பரவி வருகின்றது.

இந்நிலையில் பிரான்சுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வர எந்த தடையும் இல்லை.

பிரான்சுக்கு வருவதற்கான அத்தியாவசிய காரணத்தை தெரிவிக்கவேண்டும்.

பிரான்சுக்குள் நுழைந்ததும் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், பிரான்ஸிற்கு பயணிப்பதற்கு முன்பு செய்துகொண்ட, கொரோனா பரிசோதனையில், உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

இந்த விதிமுறை 11 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு கிடையாது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம், உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதுடன், கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றிய ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதைக் காட்டும் சுய விளக்கச் சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிகள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே பிரான்சுக்குள் பயணிக்கலாம்.

கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

இந்த விதிமுறை 11 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு கிடையாது.

அத்துடன், கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதுடன், கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றிய ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதைக் காட்டும் சுய விளக்கச் சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்வீர்கள் என்பதற்கான உறுதிமொழியையும் சமர்ப்பிக்கவேண்டும்.

ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின், கொரோனா பரிசோதனை செய்து, உங்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், நீங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம்.

இந்த விதிமுறைகளை பின்பற்றுபவர்கள் இலகுவில் பிரான்சுக்கு பயணிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here