பிரான்ஸின் பொது இடங்களில் மின்சார விளக்குகளை ஏற்றுவதற்கு தடை

0

பிரான்ஸின் பல நகரங்களில் இரவு நேரத்தில் பொது இடங்களில் மின்சார விளக்குகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கும் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக லில் (Lille) நகரிலுள்ள இரண்டு நினைவு சதுக்கங்களை தவிர்த்து ஏனை பொது கட்டடங்களில் விளக்குகள் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்ரா மற்றும் பிரதான பகுதிகளை தவிர்த்து நகரத்தில் ஏனைய பகுதிகளிலுள்ள விளக்குகளை இரவில் அணைத்து வைக்கப்படும்.

அவை தொடர்பில் மேயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கை நகரத்தின் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் முதல் அறிவிப்பு எனவும் முழுத் திட்டம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீர் மின்சார நுகர்வையும் குறைக்கும் முயற்சியின் மற்றுமொரு பகுதியான நகரத்தில் அழகிற்காக அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகளில் செல்லும் நீரினை கட்டுப்படுத்த திட்டமிடப்ப்டுள்ளது.

மேயரின் தகவலுக்கமைய, அமுல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நகரத்தின் வருடாந்திர மின்சார நுகர்வில் 170,000 கிலோ வோட் மின்சாரத்திற்கு மேல் சேமிக்க முடியும்.

அதற்கமைய, செப்டம்பர் மாதம் 5ஆம் திங்கள் முதல் பொது கட்டிட விளக்குகள் அணைக்கப்படும்.

ஆனால் தெரு விளக்குகள் தொடர்ந்து எரியும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தினை ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here