பிரான்சில் வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்….. பலர் கைது…

0

பிரான்சில் கொரோனாவின் நான்காவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பீட்டா மற்றும் டெல்டா வகை வைரஸ்களின் பரவல் தீவிரமாகியுள்ளது.

அதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடருந்துகளில் செல்லும் போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலே சுகாதார சான்றிதழ் கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், சுமார் 161000பேர் கலந்துகொண்டனர்.

தலைநகர் பரிசில் 11,000 பேர் கலந்துகொண்டதாகவும், இதில் சில நகரங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் மொத்தமாக 27 பொலிசார், இரு ஜொந்தாமினரும் என மொத்தம் 29 அதிகாரிகள் காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்ட நாள் முடிவில் 24 பேர் பரிசில் கைதாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் 71 பேர் கைதாகியுள்ளனர்.

பரிசில் கைதாகியிருந்த 24 பேரில் 21 பேர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here