பிரான்சில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை! முக்கிய அறிவிப்பு

0
People wear face masks to help curb the spread of the coronavirus cross the Champs Elysees avenue in Paris, Saturday, May 16, 2020, as France gradually lifts its Covid-19 lockdown. Parisians enjoying their first Saturday in the sun since travel and movement restrictions were lifted. (AP Photo/Michel Euler)

பிரான்சில் ஒரு குறிப்பிட்ட, சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சர்களுடனான சந்திப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, ஊடக சந்திப்பு இடம்பெற்ற போது பிரதமர் இதனை அறிவித்தார்.

இரவு நேர ஊடங்கு வரும் ஜூன் 20 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இனிமேல் ஊரடங்கு இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் கட்டாயமில்லை.

ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உண்டு.

நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்கள் போன்ற இடங்களில் மாத்திரம் முகக்கவசம் அணியவேண்டும் என பிரதமர் Jean Castex குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here