பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பத்தில் அதிர்ச்சி சம்பவம்!

0

பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்தலைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டகாயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த குருரசம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு கூரிய கத்தி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த குருர சம்பவத்திலும் கொலையாளி இந்த குடும்பத்திற்குள் இருப்பதற்கான சாத்தியங்களை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் இந்த கட்டத்தில் இதுகுறித்த திடமான அனுமானங்களை வெளியிடுவதற்கு காவற்துறை விரும்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here