பிரான்சில் பயங்கர வெடி விபத்து… ஏழு பேருக்கு நேர்ந்த கதி….

0

தென்மேற்கு பிரான்சிலுள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 1.30 மணியளவில் Saint-Laurent-de-la-Salanque நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிவிபத்தைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தீப்பிடிக்க, தீ மளமளவென பக்கத்திலிருந்த கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது.

25 பேர் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஏழு பேர் வரை தீயில் சிக்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் வரை தீயை அணைக்கப் போராடினர்.

இந்நிலையில், மறு நாளும் யாரேனும் கட்டிடத்தில் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்துள்ளது.

வெடிவிபத்துக்கான காரணத்தை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here