பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்..!

0

பிரான்சில் இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றது.

மதுபான விடுதிகளும் உணவகங்களும் வெளியிலேயும் வாடிக்கையாளர்களை அமரவைக்க அனுமதியளிக்கப்படுகிறது.

மேலும் ஒரு மேஜையைச் சுற்றி ஆறு பேர் மட்டுமே அமர அனுமதியளிக்கப்படுகிறது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே சுற்றுபவர்கள், உரிய காரணத்தை தெரியப்படுத்தவேண்டுவதுடன், அதற்கான அனுமதி ஆவணத்தையும் காட்டவேண்டியிருக்கும்.

முன்பு அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படிருந்த நிலையில், தற்போது அனைத்து கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே சதுர மீற்றர் ஒன்றிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் முதலான கலை மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

உள் விளையாட்டு விளையாட்டு அரங்கங்களில் 800 பார்வையாளர்களுக்கும், திறந்தவெளித் திடல்களில் 1,000 பேருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

பொது இடங்களில் ஆறு பேருக்கு மட்டும் அனுமதி என்று இருந்த நிலை மாறி, இனி 10 பேர் வரை கூட அனுமதியளிக்கப்படுகிறது.

இதுபோக, முன்பிருந்த சில கட்டுப்பாடுகள் மாறவில்லை. உதாரணமாக, உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்படவில்லை.

வீடுகளிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயம் என்ற விதி தொடர்கிறது.

பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தவிர்த்து பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத சுற்றுலாப்பயணிகளுக்கான தடை தொடர்கிறது.

மாஸ்க் அணிதல் முதலான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அமுலில் இருக்கும். மாஸ்க் அணியாதவர்களுக்கு 135 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here