பிரான்சில் தீவிரமாகும் டெல்டா வைரஸ்! தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டம்

0

பிரான்சின் Landes மாவட்டத்தில் கொரோனா வைரசின் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த மாவட்டத்தில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை பிரதமர் Landes நகருக்கு வந்த போது, அங்கு கொரோனா வைரசின் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருவதை அறிந்தார்.

ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஏழு நாட்கள் நடவடிக்கையாக குறித்த மாவட்டம் கடுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் தேசிய அளவில் இந்த திரிபு பரவாமல் இருப்பதற்கு இந்த கட்டுப்பாடு அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மிக வேகமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்றுக்குள்ளானவர்கள், அறிகுறி தென்படுபவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும், மேலதிகமாக இந்த மாவட்டத்துக்கு 60.000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜூலை 1 ஆம் திகதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here