பிரான்சில் கொரோனாவை தடுக்க அரசின் அதிரடி திட்டம்…!

0

பிரான்ஸில் கொரோனாவின் நான்காவது அலை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அங்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் என இரண்டுமே தீவிரமாக பரவி வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு அவர்களுக்கான முதலாவது தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார்.

இதனால், எதிர் வரும் வாரத்தில் இருந்து, வாரம் ஒன்றுக்கு நான்கு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னர், பிரதமர் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 40 மில்லியன் பேருக்கான தடுப்பூசி போடப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here