பிரான்சில் கொடூரச் சம்பவம்… சிறுவனின் தலையை வெட்டி சாப்பிட்ட நபர்…!

0

பிரான்சில் Tarascon பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று 13 வயதுடைய சிறுவனின் தலையற்ற உடலாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்த உடல் சில நாட்களுக்கு முன் Marseille பகுதியில் மாயமான சிறுவனுடையதாக இருக்கும் பொலிஸார் சந்தேகித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை 32 வயதான ஒரு மனநல கோளாறு உள்ள நபரை நோக்கி நகர்ந்தது.

அந்த நபர் வசிக்கும் குடியிருப்பிற்கு பொலிஸார் சோதனை செய்ததில்,

அவரது வீட்டில், ஒரு பாக்கெட்டில் சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகள் கிடைத்தன.

அது காணாமல் போன சிறுவன் தானா என்பது இன்னும் உறுதிசெய்யவில்லை.

அந்த தலையில் பாதி பாகங்கள் காணவில்லை. அவற்றை அந்த சந்தேக நபர் உட்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் அங்கு வீடு முழுக்க ஆயுதங்கள் மற்றும் பயங்கரமான பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சென்ற போது எந்த வீட்டில் யாரும் இல்லை. பின்னர், அந்த சந்தேக நபர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து பொலிஸார் அங்கு சென்றனர்.

அவரை பிடிக்க முயன்றபோது, கூரையின் மேல் ஏறி தப்பி ஓட முயன்ற அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் தான் சிறுவனை கொலை செய்தவர் என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here