பிரான்சில் எப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்…?

0

பிரான்சில் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,500ஐ விட குறையும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

மேலும் மாஸ்க் அணிதல் மற்றும் தடுப்பூசி பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் கட்டிடங்களுக்குள் மாஸ்க் அணிதல் போன்ற விதிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran முதலான அமைச்சர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும், கொரோனா சூழலின் அடிப்படையில்தான் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் Veran ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இது குறித்து விளக்கமளித்த Veran, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,500ஐ விட குறையும்போது மட்டுமே விதிகளை தளர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here