பிரான்சில் எதிர்வரும் 15 நாட்கள் ஆபத்தானவை! எச்சரிக்கும் மருத்துவக்குழு

0

கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

8,541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இல்-து-பிரான்சில் மட்டுமே 887 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரான்சில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

தளர்வுகளும் அங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசின் விஞ்ஞானக் குழுவில் இருப்பவரும், பஸ்தர் நிறுவனத்தின் தொற்றியல் நிபுணரும் மருத்துவப் பேராசிரியருமான Arnaud Fontanet, அடுத்து வரும் 15 நாட்கள் மிகவும் ஆபத்தானவை எஎன்று எச்சரித்துள்ளார்.

மக்கள் விடுமுறைகளில் செல்லும்போது, மிகவும் கவனமாக சுகாதாரப் பாதுகாப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

எச்சரிக்கையாக இல்லாவிட்டால், ஒரு மரபணுத் திரிவடைந்த கொரோனா வைரஸ் பரவி, அது நிலைமையே தலைகீழாக மாற்றிவிடும்.

இதனால் மீண்டும் மருத்துவமனைகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பள்ளிகள் மீண்டும் மூட வேண்டிய நிலைமை வரும் என்பதால், நாடு சகஜ நிலைக்கு திரும்பனாலும், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here