பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாற்றம்! வெளியான தகவல்

0

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் ஓரளவிற்கு குறைந்துள்ளதால், சில கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது வரும் மே 19-ஆம் திகதி முதல் சிறிய உணவகங்களில், வெளிப்புற மேஜைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நீக்கப்பட்டு முழுமையாக மேஜைகளை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், ஒவ்வொரு மேஜைகளுக்கும் இடையிலும் கட்டாயமான பாதுகாப்பு இடைவெளிகள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் 20 சதவீத மாணவர்கள் மட்டும் பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 19-ஆம் திகதி முதல் அது 50 சதவீதமாக மாற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர், Frédérique Vidal தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வியாண்டில், விடுபட்ட பாடங்களை படிக்க 50 சதவீத மாணவர்களின் வருகை வாய்ப்பளிக்கும் எனவும் இதனால் ஒவ்வொரு மாணவருக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பல்கலைக்கழகம் வரும் அனுமதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here