பிரான்சில் அமுல்படுத்தப்படும் புதிய மாற்றங்கள்

0

பிரான்சில் மூன்றாவது கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் அமுலுக்கு வருகிறது.

இன்று ஜூன் 9 ஆம் திகதி முதல் உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலானவற்றில் கட்டிடங்களுக்கு உள்ளேயும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு, பானம் அருந்த அனுமதியளிக்கப்படுகிறது.

ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரி மொபைல் எண் போன்ற விவரங்களை கையளிக்கவேண்டும்.

கட்டிடங்களுக்கு வெளியிலும், மாடிகளிலும் இனி 100 சதவிகிதம் அளவுக்கு மக்கள் அமர அனுமதி வழங்கப்பட்ட போதிலும் ஒரு மேசையைச் சுற்றி 6 பேர் மட்டுமே அமர முடியும்.

சர்வதேச பயணத்தில் பெரும் மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியமல்லாத பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாட்டுக்குள் வருவதற்கு ட்ராபிக் லைட் சிஸ்டம் அமுலுக்கு வருகிறது.

முன்பு இரவு 9 மணியிலிருந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட போதிலும் இனி 11 மணியிலிருந்து என மாற்றப்பட்டுள்ளது.

பிரான்சுக்குள் பயன்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரெஞ்சு சுகாதார பாஸ்போர்ட் இன்று முதல் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட பெரிய நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதற்கு தேவைப்படும்.

உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் குளங்கள் முதலானவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படுகின்றன.

மக்கள் எண்ணிக்கை மற்றும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் 5,000 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவற்றிற்கு அனுமதிக்கப்படுவதற்கு சுகாதார பாஸ்போர்ட் தேவை.

ஸ்பாக்கள், கடைகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுமதிக்க சில முடியும்.

மக்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிகளை ஆரம்பிக்க முடியும்.

திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில், கட்டிடங்களின் பாதி அளவுக்கு ஆட்கள் அமர அனுமதி.

இறுதிச்சடங்குகளில் 75 பேருக்கு அனுமதி.

ஆனால், சில விடயங்கள் மாறவில்லை… பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூட, சுகாதார நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படாலொழிய அனுமதியில்லை.

பொது இடங்களில் அனைத்து கட்டிடங்களுக்குள்ளும் மாஸ்க் அணிதல் கட்டாயம்.

தவறுவோருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இரவு விடுதிகள் இயங்க அனுமதியில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here