கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸின் சுகாதார அமைச்சர் Olivier Véran, சமீபத்திய ஊடக சந்திப்பின் போது, Nièvre, the Aube மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு வரும் வெள்ளிக் கிழமை முதல் ஊரடங்கு அமுலுக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களுக்கும் நான்குவார காலம் ஊரடங்கு இருக்கும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக 16 மாவட்டங்களில் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது.
குறிப்பாக இந்த 19 மாவட்டங்களிலும் மிக கடுமையான சோதனை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 16 மாவட்டங்களில் அறிவித்திருப்பது போல், இந்த மூன்று மாவடங்களிலும், ஆறுபேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவது தடை செய்யப்படுள்ளது.
மக்கள் 30 கிலோமீற்றர்களுக்குள் மாத்திரமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.